தமிழகத்தில் தமிழன் என்ற அடையாளம் புதைக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் மதங்கள். மதங்கள் பின்னர் சென்ற தமிழர்கள் தங்களுடைய தாய்மொழியை மறந்தமையால் கடைசியில் தமிழன் என்பவன் காணமல் போய் மற்றவர்கள் எல்லாம் வந்து விட்டனர்.
அந்த வகையில் இந்த ஆண்டு தென்தமிழகத்தில் பெரும்பான்மையான கத்தோலிக்க ஆலயங்களில் இந்த ஆண்டு பொங்கல் விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது நல்ல ஒரு திருப்பம் ஆகும். தமிழர்கள் மதங்களால் பிரிக்கப்படாமல் இருந்தால் அங்கு தமிழன் மட்டுமே இருப்பான். தமிழன் மட்டும் அங்கிருந்தால் தமிழ் பண்பாட்டை கூறுபோட்டுக்கொண்டிருக்கும் விரோதிகள் காணாமல் போய்விடுவார்கள்.
0 Comments:
Post a Comment