Saturday, March 1, 2008

பரவர் குரல்- சில கேள்விகளுக்கு பதில்கள்

மும்பையிலிருந்து வெளிவரும் பரவர் குரல் என்ற மாத இதழில் கடல் புறத்தான் பதில்கள் என்ற என் பகுதிகளிலிருந்து சில...
௧. வெள்ளிக்கிழமைகளில் சிலர் மீன்சாப்பிடுவதில்லை‌யே ஏன்?
மீன் சாப்பிடுவதால் மனிதர்களுக்கு எந்த குறையுமே வருவதில்லை. அதுவும் வெள்ளிக்கிழமை அதற்கு நோ சொல்லுவது தர்மமாகாது. ஏனெனில் ‌வெள்ளிக்கிழமை என்ற வார்த்தையே ஃப்ரேயா என்ற ஸ்காண்டிநேவிய மீன் தெய்வத்தின் பெயரில் தான் வந்தது.
ஃப்ரேயாவின் திருநாளை கொண்டாடிய அந்த மக்கள் அந்தநாள் மட்டும் மீன்களை வயிறு புடைக்க உண்பார்கள். ஒரு காலத்தில் திருச்சபை கூட ஒரு காலத்தில் கிறிஸ்தவர்கள் வெள்ளிக்கிழமை மீன் உண்ண வேண்டும் என்று கட்டளையிட்டதாக நான் சொன்னால் அதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். இதையும் மீறி நீங்கள் மீன் ஒறுத்தல் செய்ய விரும்பினால் அந்த பணத்தை ஏழைகளுக்கு கொடுத்து விடுங்கள்

0 Comments: