பாவப்பட்ட இலங்கைத்தமிழர்களும் மரத்துப்போய் நிற்கும் இந்திய அரசும்
இன்றைக்கு தினமலர் தலைப்பு செய்தியை படித்த உடன் அந்த பத்திரிகையின் தமிழ் எதிர்ப்பு கோமாளித்தனம் வெளிப்பட்டு நிற்பதுடன் அதனுடன் சேர்த்து இந்திய அரசாங்கம் தமிழர்களை எப்படி முட்டாள்களாக நினைப்பதையும் நிர்வாணமாக காட்டியுள்ளது.
இலங்கை பிரச்சனையில் தொல் திருமாவளவன் இருக்கும் உண்ணாவிரதத்தை நாடகம் போல் சித்தரிக்கும் தினமலர் செய்தி இந்திய வெளியுறவுத்துறை செயலரின் இலங்கை பயணத்தை சிரத்தை மிகுந்த ஒரு பயணம் காட்ட முயன்றாலும் அதில் அடுத்த பத்தியியேலே சாயம் வெளுத்து போய் நிற்கிறது.
இலங்கைக்கு இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் போர் நிறுத்தத்திற்கு செல்லவில்லை. அவர் பயணம் முடிந்த அளவு இலங்கையை திருப்திப்படுத்தவே நடக்கிறது என்பதை சொல்லும் தினமலர் இதை நாடகம் என்று சொல்லாமல் திருமாவளவன் உண்ணாவிரதத்தை நாடகம் என்று சொல்லுகிறது என்றால் இப்படிப்பட்ட பத்திரிகைகள் தரம் எப்படி இருக்கிறது.
இலங்கை தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலை குறித்து உலகத்ததமிழர்கள் அனைவரும் தூக்கத்தை தொலைத்துக்கொண்டிருக்கும் போது கருணாவின் காட்டிக்கொடுக்கும் பேட்டியை போட்டால் கூட பத்திரிகை சுதந்திரம் என்று சொல்லி சகித்துக்கொள்ளலாம். நாடக பாத்திரங்களை மாற்றி போடுகிறது என்றால் இப்படிப்பட்ட பத்திரிகைகளை தமிழகத்தின் முன்னணி பத்திரிகை என்று சொல்லுவது தமிழர்களுக்கு தான் கேவலம்.
இலங்கை பிரச்சனையில் இந்தியால் என்ன செய்யமுடியும்? ஒன்றும் முடியாது என்பதை விட புலிகள் முற்றிலும் அழிக்கப்படும் வரை இந்தியா ஒன்றுமே செய்யாது என்பது தெரிந்தது. தமிழர்களை கூண்டோடு அழிக்க வெறிகொண்டு அழையும் , தமிழக தலைவர்களை அரசியல் கோமாளிகள் என்று சொன்ன இலங்கை தளபதி சரத்தை சிறந்த இராணுவ தலைவர் என்று பாராட்டிய இந்திய வெளியுறவு செயலாளர் எதற்காக கொழும்பு சென்றுள்ளார். சரத்தை நேரில் பாரட்டவா?
இந்த விவகாரத்தில் இலங்கை தமிழர்களை விட பாவப்பட்டவர்களாக தெரிவது பலமின்றி புதுடெல்லியை பார்த்து நிற்கும் தமிழக அரசியல் தலைவர்கள் தான்.
Friday, January 16, 2009
இந்திய வெளியுறவு செயலாளர் எதற்காக கொழும்பு சென்றுள்ளார்?
Posted by ராஜா வாயிஸ் at 4:01 AM
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
//இந்த விவகாரத்தில் இலங்கை தமிழர்களை விட பாவப்பட்டவர்களாக தெரிவது பலமின்றி புதுடெல்லியை பார்த்து நிற்கும் தமிழக அரசியல் தலைவர்கள் தான்.//
அந்த மாங்கெட்ட பிழைப்புக்கு நாண்டுகிட்டு சாகலாம்!
ஆனா அந்த அளவுக்கெல்லாம் நம்ம தமிழக அரசியல் தலைவர்களுக்கு சொரணை இல்லை!
தமிழக அரசியல் தலைவர்கள் பற்றி சொல்கிறீர்களே. அங்கு புலிகளை ஒழிக்க சபதம் எடுத்திருக்கும் கருணா, டக்லஸ் பற்றி எல்லாம் ஏன் ஒன்றுமே சொல்ல மாட்டேன் என்கிறீகள்?புலிகள் முதலில் இலங்கை தமிழர்களிடம் ஒற்றுமை கொண்டு வந்து போராடினால் இந்த பிரச்சனை இந்த அளவு வந்து இருக்காது
தமிழ்நாடு அரசின் லிமிட்டு அவ்வளவுதான்
தேவைப்பட்டா எதிர்வரும் தேர்தலில் காங்கிரசுக்கு றிவட்டு அடிக்கலாம்
ஆனா தேர்தல் வரும்போது நமது அப்பாவி தமிழன் எல்லாத்தையும் மறந்து விடுவானே,
அந்த நேரத்தில் நம்ம தமிழனுக்கு என்ன பிச்சினை காத்திருக்கோ?
தமிழன் முழிச்சுகிடுவான் என்று நான் நினக்கவில்லை.
பாராட்டும்,பரிசும் கொடுக்கப் போயிருக்கிறான் பரதேசிப் பயல்.
சோனியாவின் பழி தீர்க்கும் படலத்திற்குப் பரிசு கொடுத்துள்ளார்கள்.
தமிழினத்திற்கே அவமானம்.
Post a Comment