Thursday, December 11, 2008

இலங்கையில் ஈழர் பலி


இலங்கையில் ஈழர் பலி

மும்பை இலக்கிய உலகின் ஒரு விடிவெள்ளி. பல்வேறு கவிதை தோட்டங்களுக்கு சொந்தக்காரர், அன்பர், நண்பர் திரு. முகவைத்திருநாதன் அவர்களின் ஈழத்தமிழர் பற்றிய கவிதை கண்ணீர் ஒன்று இதோ:

உருளும் உலகின் ஒவ்வோர் அங்குலமும்
உருவாகி இருக்கும் ஒவ்வோர் உயிர்க்கும்
புழுவென அவைவாழ புகழிடம் ஆகுமே ( அவையாவும்)
உலகின்மேல் தாம் கொண்ட உரிமைகள் பாடுமே

உன்னைப்போல் பிறரையும் எண்ணிப்பார் தெரியும் ( அதுயிம்)
மண்ணுளோர் மனமிருப்பின் மற்றவை மறையும்
தனக்கொன்று பிறர்க்கொன்று புறம்பேசித்திரியின்
கணக்குள் அடங்கா பிணக்குகள் பிறக்குமன்றோ

பரமுள நீதிதனை பலமுளான் மீறலாமோ
அறமற்றவன் பீடமேறின் அநீதியே நீதியாமோ!
அரக்கனென அவனைச்சொல்ல அகிலம் தயங்கலேனோ
சிரமற்றார் போலுலகு இருநாக் கேற்பதேனோ!

உடமை உரிமை தன்மானம் பறிபோகும்போது
கடமை எதுவெனில் உரிமைக்காய் உயிர்த்தலே
உடலுயிர் அனைத்தும் உரிமைக்காய் நீக்குவர்
விடலுயிர் உரிமைக்காய்மேலான தென்றே

கண்முன் அநீதிகண்டும் கண்பட்டி கட்டலாமோ ( கண்டும்)
பின்திரும்பும் பழக்கம் பெடையர்க்கன்றோ சொந்தம்!
கயமையின் காட்டுத்தீயில் ஈழர்பலி போகலாமோ!
நயவஞ்சக நியத்தாலே நீதிசாம்பல் ஆகலாமோ!


கண்முன் அநீதிகண்டும் கண்பட்டி கட்டலாமோ

0 Comments: