Monday, November 9, 2009

சொல்லி அடித்த அடி


நேற்று தொடங்கிய மகாராஸ்ட்ரா சட்டமன்ற கூட்டத்தொடரில் நடந்த அடிதடி இந்திய ஜனநாயகத்திற்கு புதிதானதல்ல. ஆனால் நம்மூர் சினிமா ஸ்டார்கள் பாணியில் சொல்லி அடிப்பேன்டா என்ற தோரணையில் இந்தியில் உறுதிமொழி எடுத்தால் கட்டாயம் துவைத்து விடுவேன் என்று சொன்ன வாக்குறுதியை நவநி்ர்மான் தலைவர் ராஜ் தாக்கரே காப்பாற்றி உள்ளார்.
மொழியை வைத்து ராஜ் தாக்கரே அரசியல் செய்ய தமிழக தலைவர்களிடமிருந்து கற்றுக்கொண்டதாக வட இந்திய ஊடகங்கள் எழுதுகின்றன. மொழியை வைத்து அரசியல் வியாபாரம் செய்யலாமா அல்லது அது எந்த அளவிற்கு இப்போது வெற்றி பெறும் என்பது ஒரு புறம் இருக்கட்டும். வழக்கம் போல் ராஜ் தாக்கரே இப்படி செய்யும் அதிரடி வேலைகளால் மும்பைக்கர்கள் அரண்டார்களோ இல்லையோ ஆனால் அவரின் தாய்கட்சியான சிவசேனா மிரண்டு போய் தான் உள்ளது.
24 மணி நேர செய்தி சானல்களின் புண்ணியத்தால் அபு அஸ்மீ குடும்ப பெண்களின் பரிதாபத்தை பெற்றுக்கொண்டாலும் இந்த மனிதருக்கு ஏன் இந்த வீம்பு என்ற பேச்சும் இல்லாமல் இல்லை. இந்தி வாசிக்கத் தெரிந்தவர்களால் மராத்தி வாசிக்க இயலும். இரண்டிற்குமே கிட்டத்தட்ட எழுத்து முறை ஒன்று தான். அப்படி இருக்க எனக்கு மராத்தி தெரியாது என்ற அபுவின் வாதத்தை பெரும்பாலோர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அபுவும் ஒரு வம்பு உண்டாக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே செயல்பட்டதும் அப்பட்டமான உண்மை.
இந்தி தேசிய மொழி என்றால் அதற்கு பொருள் பிராந்திய மொழி களை அழித்து விட வேண்டும் என்பதல்ல. அடித்தது தவறு தான். ஆனால் அந்த கோபத்தில் ஒரு நியாயம் இருக்கிறது. இந்த கோபம் 50 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றி இருந்தால் தமிழர் இந்தி எதி்ர்ப்பு போராட்டத்திற்கும் உறுதுணை கிடைத்திருக்கும், மராத்தியர்களும் இவ்வளவு இழந்திருக்க வேண்டிய தேவை இருக்காது.

2 Comments:

Anonymous said...

True. I agree with you.

- Anban, Singapore

')) said...

muzu muttaal thanamana pathivu.