Thursday, July 17, 2008

மீனவர்களுக்காக திமுகவும் பாமகவும் வரிந்து கட்டுமா?



தமிழ்நாட்டு மீனவர்கள் இந்த நாட்டின் குடிமக்கள் தானா என்று சந்கேதப்படும் அளவிற்கு அவர்களின் எதிர்காலம் பற்றி கவலைப்படாமல் இந்த அரசாங்கம் கைகட்டி வாய்பொத்தி நின்று கொண்டிருப்பது ஒரு அரசாங்கம் தன் ஆதிகுடிகள் மீது இவ்வளவு அலட்சியமாக நடந்து கொள்ள முடியுமா என்ற வேதனையை உண்டாக்கி உள்ளது.
கிட்டத்தட்ட போர்ப்பிரதேசங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிற மக்களின் சூழ்நிலையை போன்று தான் இன்றைக்கு தென்மாவட்டங்களின் மீனவர்கள் வாழந்து கொண்டிருக்கிறார்கள். தங்களின் பாரம்பரிய தொழிலை தங்களின் புண்ணிய பூமியில் செய்வது இந்த மக்களுக்கு இன்றைக்கு இயலாத காரியமாக மாறிவிட்டது. காலையில் கடலுக்கு செல்லும் தன் கணவன் மாலையில் சிங்கள் பேய்நாய்களின் தாக்குதல்களிலிருந்து தப்பித்து வருவானா என்று ஒவ்வொரு மீனவ பெண்ணும் கவலைப்படும் அளவிற்கு நிலைமை பாதாளத்தில் போய் நிற்கிறது.
பக்கத்தில் இருக்கும் இலங்கை தனி நாடாக இருக்கலாம். ஆனால் மறுகரையான மன்னாரில் உள்ள மீனவர்கள் அனைவரும் இக்கரை மக்களின் சொந்தக்காரர்கள். ஆனால் ஈழப்போர் இன்றைக்கு இந்த இரண்டு கடற்கரையோர மக்களையுமே தங்கள் தொழிலை செய்ய முடியாமல் ஆக்கி விட்டது.
விடுதலைப்புலிகளை அடக்குகிறோம் என்ற போர்வையில் சிங்கள ராணுவம் நம் மீனவர்களை தொழில் செய்ய முடியாது என்ற பயங்கரத்திற்கு கொண்டு போய் விட்டுள்ளது. வெளிநாட்டு கொள்கை என்ற பெயரில் மத்திய அரசாங்கள் பக்கத்து நாட்டு அரசாங்கத்தின் அத்துமீறல்களை கண்டுகொள்ளாமல் நிற்கிறது என்றால் இதற்கு ஒரு சாத்வீக தீ்ர்வு காண மாநில அரசாங்கம் விரும்பாமல் உள்ளது ஆச்சரியத்தையும் ஆத்திரத்தையும் தருகிறது.
ஒரு மீனவனின் உயிர் இந்த அளவிற்கு மலிவாக போய்டவிட்டதா?. இலங்கை ராணுவத்தின் துப்பாக்கிக்குண்டுக்கு பலியான ஏழை மீனவனுக்கு நஷ்டஈடு கொடுக்க வரும் அரசியல்வாதி்க்கு நன்றி போஸ்டர்களை இராமேஸ்வரம் சுவர்களில் பார்க்கும் போது இந்த மக்களை ஏமாற்றுவது இந்த அளவிற்கு எளிதா என்று தோன்றுகிறது.

நிலைமை மோசமாதை கண்டு தமிழகத்தில் திமுகவும் அதிமுகவும் ஒரே நேரத்தில் போராட்டத்தை அறிவித்துள்ளது இந்த சோகத்தில் இவர்கள் செய்ய நினைக்கும் காமடியைத்தான் காட்டுகிறது. மத்தியில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவு தர தன் தந்தையின் பெயரை லக்னோ விமானநிலையத்திற்கு வைக்க வேண்டும் என்ற அஜித்சிங்கின் கோரிக்கையை மத்திய அரசு ஒரே இரவில் நிறைவேற்றி உள்ளது. திமுகவிற்கு மீனவர் நலனில் அக்கறை என்றால் இலங்கை ராணுவத்திற்கு தரும் ஆதரவை இந்தியா விலக்கிக்கொள்ளா விட்டால் ஆதரவு வாபஸ் என்று அறிவிக்கட்டுமே. திமுக இதைக்கட்டாயம் செய்யாது என்று தெரியும், ஆனால் பட்டாளி மக்கள் கட்சி இதைச்செய்யலாமே?

8 Comments:

')) said...

விமான நிலையத்திற்கு பேர் வைப்பது போல் ஒரே இரவில், இலங்கையுடன் ராணுவ ஒப்பந்தத்தை எல்லாம் வாபஸ் வாங்க முடியாது நண்பரே.

நமது மீனவர்கள் கடலில் உயிரிலப்பது நிச்சியமாக வருந்ததக்க சம்பவம் தான் அதில் மாற்று கருத்து கிடையாது. ஆனால அதே வேளையில் இலங்கை ராணுவம் ஒன்னும் மீனவர்கள் சொல்வது போல் அவர்கள் நமது எல்லைக்குள் வந்து துப்பாக்கி சூடு நடத்துவதில்லை. அவர்கள் கப்பலில் GPS,radar உட்பட எல்ல நவினரக தொழில்நுட்பமும் அவர்களிடம் உண்டு. அவர்கள் எல்லை என்ன என்பது அவர்களுக்கு தெளிவாக தெரியும்.

அதைவிட நவினரக தொழில்நுட்பம் நம் கடற்படையிடம் இருக்கிறது. அவர்கள் நம் நாட்டு எல்லையை கடந்து வந்தால் நம் ராணுவம் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்காது. இது அவர்களுக்கும் தெரியும்.

அண்டை நாடு அதுவும் மிகப்பெரிய நாடான இந்தியவிற்குள் ஊடுறுவும் அளவிற்கு அவர்களுக்கு தைரியமும் இல்லை தேவையும் இல்லை.

இவ்வளவு வருடமாக தமிழக அரசும்,மத்திய அரசும் ஏண் இந்த விசியத்தில் அடக்கி வாசிக்கிறார்கள் என்றால் இதுதான் காரணம். நம்மீனவர்களிடமும் கொஞ்சம் தவறு இருக்கிறது.

கடந்த முறை இதேப்போல் சம்பவம் நிகழ்ந்த போது, நண்பர் ஜிம்ஷாவின் பதிவிற்கு, நான் இதே கருத்தைதான் வலியுறுத்தினேன்.

நேரமிருந்தால் இந்த இரண்டு பதிவையும் பின்னூட்டத்தையும் படிக்கவும்.

http://tvmalaionline.blogspot.com/2008/06/blog-post_27.html

http://tvmalaionline.blogspot.com/2008/06/blog-post_4592.html

')) said...

வணக்கம் ராஜா.
நல்ல பதிவு போட்டு இருக்கீங்க... வாழ்துக்கள்..
மும்பைல எங்க இருக்கீங்க....
நான் வசைலஇருக்கேன் .....
தொடர்புக்கு தயார் நீங்கள் விரும்பினால் >>>???
வெண்ணைய்

')) said...

நண்பருக்கு,

குண்டடிபட்டு சாவும் மீனவர்கள் எல்லாம் இலங்கை கடல் எல்லைக்குள்
சென்றவர்கள் என்கிறீர்களா? . நீங்கள் சொன்னமாதிரி நம் எல்லைக்குள்
அடுத்தவர்கள் வந்தால் கண்டுபிடிக்கும் திறன் நம் இராணுவத்திற்கு உள்ளது.
அப்படியென்றால் இது யார் ஆதரவுடன் நடக்கிறது. ‌தவறு செய்யும் மீனவர்கள்
மட்டும் தான் கொல்லப்படுகிறார்களா?. பாதுகாப்பு என்ற பெயரில்
அந்நியர்கள் செய்யும் அட்டுழியங்களை வெளிநாட்டு கொள்கைகள் என்ற பெயரில்
சகித்துக்கொள்வவதற்கு யார் காரணம்?

')) said...

//குண்டடிபட்டு சாவும் மீனவர்கள் எல்லாம் இலங்கை கடல் எல்லைக்குள்
சென்றவர்கள் என்கிறீர்களா?//

என் அறிவிற்கு எட்டியவரை அப்படிதான் தோனுகிறது.

மீனவர்களுக்கு கடல் அத்துபிடி ஒரு நாள் விரித்த வலை மறுநாள் அதே இடத்தில் விரிப்பார்கள் அதனால் வழி தெரியாமல் இலங்கை கடல் பகுதிக்கு செல்கிறார்கள் என்பது உண்மையான காரணம் அல்ல, அவர்கள் பகுதியில் மீன்கள் அதிகம் உள்ளதால் போகிறார்கள் என்பதே நிஜம்.

Unless or otherwise Srilanka Navy intrudes into our border, neither state goverment or central goverment would not be able to take any action against them.

Cantell me one good reason why do they need to cross our border and kill our Fishermen, that too when they are totally depend on our military support to fight against LTTE.

When our country has guts to give the counter attack to china, when they intrudes into our area. Do you think India will keep mum, when Srilanka crosses our Border.

No my friend.This is not the fact.

மீனவர்கள் எல்லை தாண்டி போவதால் மட்டுமே சுடப்படுகிறார்கள். அரசியல் கட்சிகளுக்கு அவர்களுடைய ஒட்டு மிக முக்கியம்,ஆதலால் மீனவர்களை விட்டு கொடுக்காமல் பேசுகிறார்கள்.

மீனவர்கள் வயிற்று பிழைப்பிற்காக, உயிரை பனையம் வைத்து எல்லை தாண்டி செல்கிறார்கள் என்பதே யதார்த்தம்.

')) said...

இன்னமும் உங்களுக்கு ஐயமிருந்தால் அரசு குறிப்பை நன்கு கவனியுங்கள். தமிழக மீனவர்களை சுட்ட சிங்கள ராணுவத்திற்கு கண்டனம் என இருக்குமேயன்று, நமது எல்லைக்குள் வந்து மீனவர்களை சுட்டார்கள் என்று எங்கேயும் குறிப்பிட்டிருக்க மாட்டார்கள்

')) said...

மீனவர்கள் இலங்கை கடலுக்குள் செல்லுவதால் தான் சுடப்படுகிறார்கள் என்று
உங்களுக்கு எப்படித்தோணுகிறது. இந்த மனத் தோற்றம் உங்கள் அனுமானமா அல்லது
வேறு ஆதாரங்களின் அடிப்படையிலானதா என்பதை சொல்ல முடியுமா?

இலங்கை கடலுக்குள் சென்று தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கிறார்கள் என்றால்
கச்சத்தீவை தாரை வார்த்த அரசாங்கம் இந்த மீனவர்கள் எங்கு போய்
மீன்பிடிப்பார்கள் என்று முடிவுசெய்தது? ஒரு நாட்டின் எல்லைக்கும்
மீனவர்களின் தொழிலுக்கும் உள்ள இடைவெளி ஒரு துப்பாக்கி நீளம் என்ற நிலை
எப்படி உருவானது.?
மீனவர்களின் ஓட்டு இன்னும் ஒருமுகப்படுத்தப்படவில்லை. எனவே தான் அரசியல் கட்சிகள் மீனவர்களின் பிரச்சனையை ‌பெரிதாக்க விரும்பவில்லை என்பது தான்
உண்மை

')) said...

பலமுறை சிங்கள ராணுவத்தினர் நமது எலைக்குள் வந்து நமது மீனவர்களை தாக்கி
இருக்கிறார்கள். அவர்களை தாக்கவோ, தடுக்கவோ அல்லது சுட்டு வீழ்த்தவோ
இந்திய கடற்படையினர் ஒருமுறை கூட முயற்ச்சி ஏன் எடுக்கவில்லை என்பது புரியாத புதிர்.

நண்பரே இது இன்றைய தினமணியின் தலையங்கம் தான்

')) said...

//மீனவர்கள் இலங்கை கடலுக்குள் செல்லுவதால் தான் சுடப்படுகிறார்கள் என்று
உங்களுக்கு எப்படித்தோணுகிறது. இந்த மனத் தோற்றம் உங்கள் அனுமானமா அல்லது
வேறு ஆதாரங்களின் அடிப்படையிலானதா என்பதை சொல்ல முடியுமா//

இதுவரை மத்திய அரசோ, மாநில அரசோ, வெளியுறவு துறை அமைச்சகமோ அதிகார்வபூர்வமாக இலங்கை கடற்படை நம் நாட்டின் எல்லைக்குள் வந்து துப்பாக்கி சூடு நடத்தினதாக குற்றம் சாட்டினதில்லை.

ஆனால் பாக்கிஸ்தான்,பங்களாதேஷ்,சீனா போன்ற நாடுகளை பல முறை கண்டித்துள்ளது. பலத்தில் பெரிய நாடான சீனாவையே கண்டிக்கும் நாடு, இலங்கை போன்ற சிறிய நாட்டையா விட்டு வைக்கும். மேலும் இலங்கை கடற்படை நமது எல்லைக்குள் வந்து தாக்குவதற்க்கு எந்த நோக்கமும் இருக்க முடியாது என்பது என் எண்ண்ம்.

//இலங்கை கடலுக்குள் சென்று தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கிறார்கள் என்றால்
கச்சத்தீவை தாரை வார்த்த அரசாங்கம் இந்த மீனவர்கள் எங்கு போய்
மீன்பிடிப்பார்கள் என்று முடிவுசெய்தது? //

இதுதான் என்னுடைய கேள்வியும் கூட. நாம் இலங்கையுடன் போட்ட ஒப்பந்தப்படி கச்சதீவில் நம் மீனவர்கள் வலையை காய வைப்பதற்கு மட்டுமே உரிமையுள்ளது.

இதைவிட வியப்பளிப்பது என்வென்றால் இந்த சட்டம் நிறைவேற்ற பட்ட போது, பெரிதாக எந்த எதிர்ப்பையும் எந்த கட்சியும் காட்டியதாக தெரியவில்லை