Friday, September 5, 2008

மும்பையில் தினகரனும் தினத்தந்தியும்



தமிழ் மும்பைக்கர்களுக்கு இன்றைக்கு ஒரு முக்கியமான நாள். ஆம் தமிழகத்தில் இதுவரை சேவை செய்து வந்த இரண்டு பெரிய நாளிதழ்களான தினகரனும், தினத்தந்தியும் இன்று முதல் மும்பையில் தங்கள் கடையை விரித்துள்ளன. மராத்திய முரசு, தினபூமி மற்றும் தமிழ்டைம்ஸ் என ஏற்கனெவே மூன்று பத்திரிகைள் இருக்கு புதிய இரண்டு பெரிய பத்திரிகைகளின் வருகை மும்பை தமிழர்கள் மத்தியில் ஒரு விறுவிறுப்பை உண்டாக்கியுள்ளது.

பொதுவாக தமிழகத்தை விட்டு வெளியே போன தமிழர்கள் தரத்துடனும் தமிழ் பண்பாட்டில் சிறிது வலிவுடனும் இருப்பார்கள் . ஆனால் மும்பையில் இது சிறிது மோசம் தான். மும்பை தமிழகர்ளுக்கு என்று அடையாளம் என்ன என்று கேட்டால் அதை கண்டுபிடிப்பது கொஞ்சம் கடினம் தான்.

மும்பைக்கு தமிழ் தலைவர்கள் யார் என்று கேட்டால் அவ்வப்போது வந்தார்கள் வென்றார்கள் என்ற தலைப்பில் லோக்கல் பத்திரிகைகள் தலைப்பிட்டு போடும் கட்டுரைகளை வைத்து தான் மதிப்பிட முடியும். இந்த பட்டியல் எப்படி தயாராகிறது என்பது ஒரு பெரிய வினோதமான விசயம். பத்திரிகையாளர்களை நன்றாக கவனிக்கத்தெரிந்த அல்லது பத்திரிகையாளரின் சாதி்க்காரர்ள் தான் இந்த சாதனையாளர்களின் பட்டியலில் பொதுவாக வருவார்கள். மாதத்திற்கு ஐந்தாயிரம் பத்திரிகையாளர்களுக்கு செலவழிக்கக்கூடிய பலர் தான் இன்றைக்கு மும்பைத் தமிழ் தலைவர்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் மும்பையில் தினகரனும், தினத்தந்தியும் இங்கு பலத்த ஆரவாரத்துடன் நுழைந்துள்ளன.மும்பை பெஸ்ட் பேருந்துகளில் தமிழில் தினத்தந்தி விளம்பரத்தை பார்த்தது கொஞ்சம் வித்தியாமாகத்தான் இருந்தது. இதுவரை இங்கு இப்படி தமிழ் விளம்பரங்கள் வந்ததில்லை என்பதை இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது. தினத்தந்தி இப்படி முந்திக்கொண்டு வந்ததை முறியடிக்க தினகரன் தனது அசுர பலமான சன் டிவி நெட்வொர்க்கை பயன்படுத்தி தனது மும்பை வரவை உலகத்தமிழர்களுக்கெல்லாம் அறிவித்து பரவசத்தை கூட்டியது.

மும்பையை பொறுத்த வரையில் எத்தனை தமிழர்கள் இருக்கிறார்கள் என்பது தமிழகத்தில் எந்த சாதியினர் எத்தனை சதவிகிதம் என்று கணக்கு சொல்லுவது போல சிறிது கடினமான விசயம். மேடைகளில் 15 லட்சம் , 20 லட்சம் தமிழர்கள் வாழுவதாக பலர் முழங்குகிறார்கள். ஆனால் மும்பையில் மொத்தம் ஒரு நாளைக்கு விற்பனையாகும் தினசரி எண்ணிக்கை கிட்டத்தட்ட 35 ஆயிரம் பிரதிகள் தான். இந்த எண்ணிக்கையில் பங்கு போட்டு்க்கொள்ளத்தான் புதிதாக இரண்டு பேர்கள் வந்துள்ளார்களா என்றால் அந்த கேள்வியில் தான் இந்த இரு பத்திரிகைகளின் எதிர்காலம் மற்றும் மும்பை தமிழர்களினன்அடையாளம் அடங்கியுள்ளது.

மும்பையில் தமிழ் பத்திரிகை வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு காரணங்கள் என்ன?
அ) பொதுஇடங்களில் கையில் வைத்து கொண்டு போகும் அளவிற்கு இங்குள்ள தமிழ் தினசரிகள் தரமானவை அல்ல. திருமண விளம்பரங்கள் மரண விளம்பரம் போல பலவேளை வருகின்றன.
ஆ) சிதறிக்கிடக்கும் தமிழர்களை தமிழ் பத்திரிகை சென்றடைவது ஒரு இயலாத காரியம்.
இ) தமிழ் தினசரிகள் தரமான செய்திகளை தருவதில்லை.
ஈ) மும்பை தமிழர்களில் புதிய தலைமுறையினருக்கு தமிழ் படிக்க தெரிவதில்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தினகரனும் தினத்தந்தியும் எப்படி தங்களையும் தமிழையும் வளர்க்க போகின்றன என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி தான். இதுவரை தமிழ் பத்திரிகைகள் வாங்காத குடும்பத்தினரை தங்கள் பத்திரிகையை வாங்க வைப்பதில் தான் இதன் வெற்றியின் ரகசியம் இருக்கு முடியும்.. புதியவர்களை எப்படி தமிழ் பத்திரிகை வாங்க வைக்கப்போகிறார்கள் என்பதில் தான் வியாபார யுத்தி அடங்கியுள்ளது.

திமுககாரர்கள் தினகரன் வாங்கக்கூடாது என்று கலைஞர் சொல்லி விட்டார். அவர் சொன்னதை திமுககாரர்கள் கேட்கவில்லை என்பது ஒருபுறம் இருக்க மும்பை தினத்தந்தியை வாழ்த்தி தமிழக முதல்வரின் செய்தியை தினத்தந்தி வெளியிட்டு தினகரனுக்கு முதலிலேயே ஒரு செக் வைத்துள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இங்கு யார் ஜெயிக்கப்போகிறார்கள் என்று பார்க்கும் போது நடுநிலையில் இருப்பவர்கள் வேண்டுவது தமிழ் ஜெயித்தால் சரிதான் என்பது தான். இந்த பெரிய பத்திரிகைகளின் போட்டியில் ஏற்கனெவே உள்ள பத்திரிகைகள் எவ்வளவு காலம் தாக்குபிடிக்க போகிறது என்பது அடுத்த பெரிய கேள்வி???

3 Comments:

')) said...

நல்ல அலசல்

Anonymous said...

தமிழ்நாட்டு தமிழனை சுயமாக சிந்திக்கவிடாமல் குட்டிச்சுவராக்கியது போல் மும்பை தமிழர்களையும் நடிகர்களுக்கும் அன்னியர்களுக்கு அடிமையாக்க தினத்தந்தியும், தினமலரும் போட்டிபோடுகிறார்கள்.

')) said...

//***
மும்பையில் 15 லட்சம் , 20 லட்சம் தமிழர்கள் வாழுவதாக பலர் முழங்குகிறார்கள்.
***//
அப்படியானால் 35 ஆயிரம் பிரதிகளை, 1லட்சத்துக்குமேல் மாற்றுவோம், அன்றாடம் எவ்வளவோ செலவழிக்கிறோம் நம்ம தமிழ் நாளிதழுக்கு செலவழிக்க மாட்டோமா