Monday, October 6, 2008

கருணாநிதி என்ன செய்வார்?



இலங்கை தமிழர் பிரச்சனையில் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி என்ன செய்யபோகிறார் என்பதை விட அவர் என்ன சொன்னாலும் அதை எதிர்மறையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று என்று பெரிய கூட்டம் காத்திருக்கிறது.
இன்று காலையில் ஏழு மணிக்கு என்டிடிவி ஆங்கில செய்தி கருணாநிதி இலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசியலிருந்து விலகுவதவாக மிரட்டல் என்று செய்தி வெளியிட்டது. அவர் அப்படி சொன்னது உண்மை தான். ஆனால் கலைஞர் டிவியில் ஏழரை செய்தியில் அந்த மிரட்டல் பற்றி ஒன்றுமே குறிப்பிடப்படவில்லை.
இலங்கை தமிழர் பிரச்சனையில் கருணாநிதியால் அல்லது மத்திய அரசால் கூட இப்போது பெரிதாக ஒன்றும் செய்து விடமுடியாது என்ற கனமான உண்மை ஒருபுறம் இருந்தாலும் கிளிநொச்சியை இலங்கை ராணுவம் நெருங்கும் போது அது இந்தியாவில் ஒரு சலசலப்பையும், தமிழகத்தில் மற்றுமொரு கேளிக்கூத்தையும் உருவாக்கும் என்பது எதிர்பார்த்தது தான்.
இலங்கை தமிழர்களுக்கும் தமிழக தமிழர்களுக்கும் உள்ள உறவு தொப்புள் கொடி உறவு என்பதை யாரும் மறுக்க முடியாதது தான். பக்கத்து ஊர் மாதிரி அருகில் இருக்கும் இலங்கையில் நம்மவர்கள் கூண்டோடு அழிக்கப்படுவதை காணும் போது உண்மை தமிழர்களுக்கு நெஞ்சம் பிழியப்படுவது உண்மை தான்.
ஆனால் தற்போதைய சர்வதேச அரசியல் சூழ்நிலைகளில் இந்த பிரச்சனையில் இந்திய அரசால் கூட ஒன்றுமே செய்யமுடியாது. தமிழர்களை கொல்லாதே என்று ஒரு கண்துடைப்பு நாடகத்தை மட்டுமே நடத்திட முடியும்.
இலங்கை தமிழர்கள் விசயத்தில் அதிகபட்சம் நாம் செய்யக்கூடியது, தமிழகத்தில் உள்ள அனைவரும் ஒட்டுமொத்தமாக இந்த இனப்படுகொலையில் இடிந்து போய் இருக்கிறோம் என்று காட்டுவது மட்டும் தான். மற்றபடி இந்த பிரச்சனையை வைத்து தமிழகஅரசியல் கட்சிகள் அனைத்துமே செய்யக்கூடிய கேலிக்கூத்துக்கள் இந்த நம் வலியை இன்னும் கூட்டத்தான் முடியும்.
ஆனால் இதில் ஒன்றை நாம் யாரும் மறுக்க முடியாது. கலைஞரும் இதை அரசியல் லாப ரீதியாக தான் பார்ப்பார் என்ற குற்றச்சாட்டு ஒரு புறம் இருந்தாலும் அவரை போன்று இன்றைய சூழ்நிலையில் வேறு யாரும் இதைக்கூட செய்ய முடியாது என்பது தான் உண்மை.

8 Comments:

')) said...

யதார்த்தத்தை சொல்லியிருக்கிறீர்கள் .வழிமொழிகிறேன்.

')) said...

ஈழத்தமிழர் பிரச்சினை அவ்வப்போது இந்தியாவில் ஒரு பொழுது போக்காக சாப்பிட்டவுடன் பல் குத்துவது போல கதைக்கப்படுகின்ற ஒன்று. நிச்சயமாக இந்தியாவின் பிராந்திய நலன் கருதி ஈழப்பிரச்சினை தீரக்கூடாது என்பது இந்தியாவின் கொள்கை வகுப்பாளரின் முடிவு. வெறுமனே கண்துடைப்புக்கு அறிக்கையும் வேண்டாம். சற்றே எட்ட நின்றுதான் பாருங்களேன். மனச்சுத்தமாக பிரச்சினையை தீர்க்கவேண்டும் என்றால் மத்திய அரசாங்கத்திற்கான் ஆதரவை விலக்குவது என்று காயைநகர்த்தலாமே. இன்னுமிருப்பதோ வெறும் சில காலங்கள்தான் ஆட்சி முடிவதற்கு. எல்லாமே போலி. எல்லாமே நாடகம். இங்கு வந்து பிரச்சினையை பார்க்க வேண்டும். மக்கள் படும் அவலம் காண வேண்டும். வாய்ச்சொல்லில்தான் வீரர். கருணாநிதி தான்சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானம் பற்றி அடிக்கடி சொல்கிறாரே தவிர அது நிறைவேற வழி சமைக்கவில்லை. எங்கள் பிரச்சினையை விடுங்கள். தயவுசெய்து கருணாநிதி தன்னுடைய தமிழக மீனவர்களின் உயிரையாவது குறைந்த பட்சம் பாதுகாக்க வேண்டும் என் அன்பாக கேட்டுக்கொள்கிறோம். மத்திய அரசு ஆயுதம் கொடுத்து மாநில மக்களை வேறொரு அரசு மூலம் கொலை செய்கிற அவலம் இந்த உலகத்தில் எங்கும் இல்லை. இந்தியாவைத்தவிர.

')) said...

தமிழ் விரும்பி,
இப்போ கருணாநிதி பதவி விலகி ,ஜெயலலிதாவிடம் ஆட்சியை கொடுத்து விட்டால் உங்களுக்கு விடிஞ்சிடுமாக்கும் ?

')) said...

கருத்துக்கு நன்றி தமிழ் விரும்பி

மத்திய அரசிற்கு ஆதரவை விலக்கினால் மட்டும் என்ன ஆகும். ஏற்கனேவே ஒரு முறை புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஒரு கட்சிக்கு இன்னும் ஆறு மாதங்களில் ஆயுள் முடிகிற அரசில் இருந்து விலகினால் என்ன நஷ்டம் வந்து விடப்ப‌ோகிறது.

அமெரிக்க அணுஆயுத கொள்கையை கண்டித்து இடதுசாரிகள் ஆதரவை விலக்கினார்கள். அதில் பல ஆயிரம் கோடி வியாபாரம்‌ உள்ளது. எனவே அரசு காப்பாற்ப்பட்டது. இலங்கை தமிழர் பிரச்சனையில் இந்திய அரசியல் கட்சிகளுக்கு அப்படி என்ன ஆதாயம் உள்ளது, வரிந்து கட்டிக்கொண்டு இறங்க?

நீங்கள் சொன்ன மாதிரி, தனி ஈழம் இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு விருப்பமானதல்ல. அப்படி இருக்க அவர்கள் கூச்சல் எல்லாம் கண்துடைப்பாகத்தானே இருக்க முடியும். போதாக்குறைக்கு விடுதலைப்புலிகளுக்குஇங்கு உள்ள சூழ்நிலை ஒருபுறம் வேறு பெரிய தடையாக உள்ளதே?

')) said...

கலைஞரும் இதை அரசியல் லாப ரீதியாக தான் பார்ப்பார் என்ற குற்றச்சாட்டு ஒரு புறம் இருந்தாலும் அவரை போன்று இன்றைய சூழ்நிலையில் வேறு யாரும் இதைக்கூட செய்ய முடியாது என்பது தான் உண்மை.
///////////
ந‌ல்லா சொல்லி இருக்கிங்க‌....இதை நானும் வ‌ழி மொழிகின்றேன்.....

')) said...

ஜோ.........//

தமிழ் விரும்பி,
இப்போ கருணாநிதி பதவி விலகி ,ஜெயலலிதாவிடம் ஆட்சியை கொடுத்து விட்டால் உங்களுக்கு விடிஞ்சிடுமாக்கும் ?
.........../

நான் அப்படி கதைக்கவில்லை. உங்களுக்கு தெரிகிறதுதானே உங்களாலும் முடியாது, கருணாநிதியாலும் முடியாது. பிறகென்ன ஐயா கூட்டம் போட்டு கூத்துக்காட்டுகிறீர்கள். எல்லோரும் எமது பிரச்சினையை அரசியலாகவே பார்க்கிறார்கள். நாம் அதை மனிதாபிமானமாக அனுக சொல்லித்தான் வேண்டுகிறோம். ஆனால் 2000ம் ஆண்டு புலிகள் யாழ்ப்பாணத்தை பிடிக்கபோகிறார்கள் என்ற உடன் வங்கக்கடலில் கப்பலுடன் காத்து இருந்தது இந்திய அரசாங்கம். சிறிலங்கா அரச படைகளைக் காப்பாற்ற. இந்தியா சிலவேளைகளில் எதை செய்கிறோம் என எதை செய்ய வேணும் என தெரியாமல் பிராந்திய வல்லரசு என் கூக்குரலிட்டு அதை வேறு நாடுகளிடம் கொடுக்கிற பரிதாபம்தான் நிகழ்கிறது. பாகிஸ்தானும் சீனாவும் ஆயுதம் கொடுக்கிறது. நான் கொடுக்காவிட்டால் அவர்கள் கொடுப்பார்கள் என்ற வாதத்தை முன்வைத்து தானும் ஆயுதத்தை கொடுக்கிறது. ஆனால் இலங்கை இப்போ மூன்று நாடுகளிடமும் ஆயுதம் வாங்குகிறது. சரி, இந்தியா பிரச்சினையைத் தீர்த்துவிட்டால் பாகிஸ்தான் சீனா தலையீடு இருக்காதல்லவா. இந்தியாவால் இலங்கையை கட்டுக்குள் வைத்திருக்க முடியவில்லை. ஏன் கண்டிக்க கூட முடியவில்லை. பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் சார்க் மாநாட்டில் மானபங்கப்பட்டார். உண்மையில் இலங்கை அரசு இந்தியாவிற்கு எப்போதும் எதிரே. இது காலம் காலமாக அரசியல் தெரிந்தவர்களுக்கு தெரியும். ஜே.ஆரின் தந்திர வலையில் ராஜீவ் விழுந்து தானே பலிக்கடாவானார். மீண்டும் மீண்டும் மத்திய சர்க்கார் அதையே செய்கிறது. பார்ப்போம் கொள்கை வகுப்பாளரின் அரசியல் சாணக்கியம்.

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக தமிழகம் குரல் கொடுக்க வேண்டும் என நான் கேட்கவில்லை. தமிழீழ மக்களுக்காக குரல் கொடுங்கள். மானசீகமாக செய்யுங்கள். உளப்பூர்வமாக செய்யுங்கள். எங்களுக்கு நீங்கள் சுதந்திரம் வாங்கித்தந்தால் தமிழகம் வாங்கித்தந்த உரிமை என்றுதானே சொல்வோம். எனக்கும் புரிகிறது யதார்த்தம். ஆனால் எங்கள் வேதனை தமிழக அரசியலுக்கு ஒரு விளையாட்டுப் பொருள். இன்று எதிர்க்கும் மத்திய சர்க்கார் காலப்போக்கில் அழகிய தமிழீழத்திற்கே தன்னுடைய நேசக்கரம் நீட்டும். அதுவும் தானாக வந்து அணைக்கும். அதற்கான பாதை தலைவன் இடுகிறான். விரைவில் நடக்கும்.

')) said...

தமிழ் விரும்பி,
தமிழ்நாட்டு மிகப் பெரும்பான்மையான பொதுமக்கள் என்றும் ,இன்றும் தமிழீழ மக்கள் மீது அனுதாபமும் அக்கறையும் உள்ளவர்களாகவே இருக்கிறார்கள் .

இலங்கையிலிருந்து வரும் ஊடக செய்திகள் பொய் என்று நீங்கள் சொல்கிறீர்களோ அது போல தமிழநாட்டு மக்களிடையே ஈழத்தமிழர் ஆதரவு இல்லையென்பதும் உயர் ஊடக பொய் என்பதை அறிந்து கொள்ளுங்கள் .

அப்படி ஈழத்தமிழர்களுக்காக கசியும் மனம் படைத்தவர்கள் பெரும்பாலும் நீங்கள் கரித்துக்கொட்டும் கலைஞர் மேல் அனுதாபம் கொண்டவர்களேயன்றி ,எதிர் முகாமிலிருப்பவர்களின் தொண்டர்கள் அல்ல என்பதை கொஞ்சம் மண்டையில் ஏற்றிக்கொள்ளுங்கள் .

')) said...

எமக்கு நிச்சயமாக தெரியும். தமிழக மக்களை நாம் என்றுமே குறை சொல்லவில்லை. அய்யா மக்களால் என்ன பண்ண முடியும். அவர்கள் ஓட்டு போட மட்டும்தான். கதிரையில் இருப்பவர்கள் கொஞ்சம் நிதானமாக நடக்கவேண்டும்.