லிட்டோரல் கம்யூனிகேஷன்ஸ்
வழங்கும்
பாவலர் முகவை திருநாதனின்
‘எதையும் தாங்கும் இமயம் அண்ணா’
நூல் அறிமுக விழா
நாளும் பொழுதும்:
17.10.2010
ஞாயிறு மாலை 6.00 மணி
இடம்:
மும்பை பரவர் சங்க வளாகம்,
டி13/8, மாட்டுங்கா லேபர் கேம்ப், மும்பை
தலைமை:
திரு. அல்பர்ட் ராயன், தொழிலதிபர், முலுண்ட்
முன்னிலை:
திரு. இராஜா வாயிஸ், பத்திரிகையாளர்
திரு. அலிசேக் மீரான் ,தொழிலதிபர்
வரவேற்புரை:
பேரா. சமீரா மீரான், (தமிழ் எழுத்தாளர் மன்ற மேலாண்குழுத் தலைவர்)
தொடக்கவுரை:
திரு. அ.இரவிச்சந்திரன், தமிழ் எழுத்தாளர் மன்றப் பொருளாளர்
நூல் முதல் படி வெளியிடுபவர்
திரு. அல்பர்ட் ராயன், தொழிலதிபர், முலுண்ட்
நூல் முதல் படி பெறுபவர்
திரு. த.மு பொற்கோ, செயலாளர் மும்பை மாநகர திமுக
வாழ்த்துரை:
திரு. பொ. அப்பாதுரை - செயலாளர், மும்பை புறநகர் தி.மு.க
திரு. சு. குமணராசன்- முதன்மை ஆசிரியர், தமிழ் இலெமூரியா
திரு. நாஞ்சில் அசோகன், தலைவர், கவியரசர் கண்ணதாசன் பேரவை
பாலவர் பாலையா- மராத்திய மாநிலத் தமிழ்க் கவிஞர் மன்றம்
கவிஞர் நெல்லை வசந்தன்- மராத்திய மாநிலத் தமிழ்க் கவிஞர் மன்றம்
கவிஞர் இறை ச. இராசேந்திரன்- செயலாளர் தமிழ் காப்போம்
திரு.எஸ். இரவீந்திரன்
மாரத்திய மாநில அ.இ.அ.தி.மு.க
திருமதி. அமலா ஸ்டான்லி
தலைவர், தமிழ் எழுத்தாளர் மன்றம்
திரு. அ. இராசமாணிக்கம்- வசாய்ரோடு தமிழ் சங்கம்
கவிஞர் புதிய மாதவி
தமிழ் எழுத்தாளர் மன்ற ஒருங்கிணைப்பாளர்
திரு. கராத்தே முருகன்- தமிழ் டிரஸ்ட்
திரு. ஞான அய்யாப்பிள்ளை
தமிழ் எழுத்தாளர் மன்றம்
ஆய்வுரை
கவிஞர் குணா தலைவர், தமிழர் நட்புறவுப் பேரவை
ஏற்புரை
நூலாசிரியர் பாவலர் முகவை திருநாதன்
நன்றியுரை
திரு. வதிலை பிரதாபன் (எழுத்தாளர் மன்றச் செயலாளர்)
தொகுப்புரை
கவிஞர் கிங்பெல்
செயலாளர், தமிழர் நட்புறவுப் பேரவை
நிகழ்ச்சிக்கு உறுதுணை:
மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம்
தமிழர் நட்புறவு பேரவை
Saturday, October 16, 2010
| [+/-] |
‘எதையும் தாங்கும் இமயம் அண்ணா’ நூல் அறிமுக விழா |
Monday, November 9, 2009
| [+/-] |
சொல்லி அடித்த அடி |

நேற்று தொடங்கிய மகாராஸ்ட்ரா சட்டமன்ற கூட்டத்தொடரில் நடந்த அடிதடி இந்திய ஜனநாயகத்திற்கு புதிதானதல்ல. ஆனால் நம்மூர் சினிமா ஸ்டார்கள் பாணியில் சொல்லி அடிப்பேன்டா என்ற தோரணையில் இந்தியில் உறுதிமொழி எடுத்தால் கட்டாயம் துவைத்து விடுவேன் என்று சொன்ன வாக்குறுதியை நவநி்ர்மான் தலைவர் ராஜ் தாக்கரே காப்பாற்றி உள்ளார்.
மொழியை வைத்து ராஜ் தாக்கரே அரசியல் செய்ய தமிழக தலைவர்களிடமிருந்து கற்றுக்கொண்டதாக வட இந்திய ஊடகங்கள் எழுதுகின்றன. மொழியை வைத்து அரசியல் வியாபாரம் செய்யலாமா அல்லது அது எந்த அளவிற்கு இப்போது வெற்றி பெறும் என்பது ஒரு புறம் இருக்கட்டும். வழக்கம் போல் ராஜ் தாக்கரே இப்படி செய்யும் அதிரடி வேலைகளால் மும்பைக்கர்கள் அரண்டார்களோ இல்லையோ ஆனால் அவரின் தாய்கட்சியான சிவசேனா மிரண்டு போய் தான் உள்ளது.
24 மணி நேர செய்தி சானல்களின் புண்ணியத்தால் அபு அஸ்மீ குடும்ப பெண்களின் பரிதாபத்தை பெற்றுக்கொண்டாலும் இந்த மனிதருக்கு ஏன் இந்த வீம்பு என்ற பேச்சும் இல்லாமல் இல்லை. இந்தி வாசிக்கத் தெரிந்தவர்களால் மராத்தி வாசிக்க இயலும். இரண்டிற்குமே கிட்டத்தட்ட எழுத்து முறை ஒன்று தான். அப்படி இருக்க எனக்கு மராத்தி தெரியாது என்ற அபுவின் வாதத்தை பெரும்பாலோர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அபுவும் ஒரு வம்பு உண்டாக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே செயல்பட்டதும் அப்பட்டமான உண்மை.
இந்தி தேசிய மொழி என்றால் அதற்கு பொருள் பிராந்திய மொழி களை அழித்து விட வேண்டும் என்பதல்ல. அடித்தது தவறு தான். ஆனால் அந்த கோபத்தில் ஒரு நியாயம் இருக்கிறது. இந்த கோபம் 50 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றி இருந்தால் தமிழர் இந்தி எதி்ர்ப்பு போராட்டத்திற்கும் உறுதுணை கிடைத்திருக்கும், மராத்தியர்களும் இவ்வளவு இழந்திருக்க வேண்டிய தேவை இருக்காது.
Wednesday, January 28, 2009
| [+/-] |
கோட்டை விட்ட கருணாநிதி |

கோட்டை விட்ட கருணாநிதி
திமுக அரசாங்கம் இரண்டு முறை ஈழத்தமிழருக்காக தனது ஆட்சியை காவு கொடுத்தது. இந்த தியாகம் பலமுறை அதன் தலைவர்களால் மேடைகளில் முழங்கப்பட்டு வந்தது. கடந்த மாதம் சட்டமன்ற கூட்டத்தொடரில் கூட இதைப்பற்றி குறிப்பிட்ட கலைஞர் கருணாநிதி இன்னுமொறு முறை இதற்காக ஆட்சியை இழக்கத்தயார் என்று கூறினார்.
கடந்த இரண்டு முறை திமுக இலங்கைப்பிரச்சனையை வைத்து ஆட்சியை இழந்தது அந்த கட்சி விரும்பி செய்தது அல்ல. மாறாக திமுக தலைவர்களின் கூற்றுபடியே பார்த்தால் அந்த டிஸ்மிஸ்கள் அநியாயமானவை. ஆனால் இந்த முறை திமுக தானாகவே முன்வந்து இலங்கை பிரச்சனைக்காக வேண்டி தனது ஆட்சியை தியாகம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. ஆனால் கருணாநிதி அதனை பயன்படுத்தாமல் கோட்டை விட்டு விட்டார்.
பாராளுமன்ற தேர்தலுக்கு நான்கு மாதங்கள் தான் உள்ளது. மாநிலத்திலும் கூட்டணி கட்சிகளை நம்பி ஆட்சி செய்ய வேண்டிய கட்டாயம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கிளிநொச்சி மீது இலங்கை ராணுவம் தாக்குதலை தீவீரப்படுத்தும் முன்னர் கலைஞர் தனது ஆட்சியை இலங்கை தமிழர்களுக்காக தியாகம் செய்ய முன்வந்திருந்தால் அவருக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டிருக்காது. ஆனால் நசுக்கப்பட்ட இலங்கை தமிழ் இனத்திற்கு பெரிய லாபம் கிடைத்திருக்கும்.
இன்றைய சூழ்நிலையில் சோனியா காந்தி திமுகவை விடவே முடியாது. சிலர் சொல்லுவது போல சோனியா காந்திக்கும் இலங்கை தமிழர் விசயத்தில் பலி வாங்கும் எண்ணம் இல்லை. இந்த சூழ்நிலையில் திமுக கொஞ்சம் கண்டிப்பாக நடந்து கொண்டிருந்தால் இன்றைக்கு தமிழர்களின் எதிரிகள் மகிழ்ச்சி அடைவதற்கான சூழ்நிலை உருவாகி இருக்காது. மத்திய அரசு இவ்வளவு மெத்தனமாக செயல்பட்டதற்கு முக்கிய காரணம் கருணாநிதியின் மிரட்டல் வெறும் பொழுதுபோக்கு என்று அது எண்ணியது மட்டுமே.
இந்திய வெளியுறவுச் செயலாளர் மேனன் மற்றும் வெளியுறவு மந்திரி பிரனாப் முகர்ஜி ஆகியோரின் கொழும்பு பயணங்கள் இதை இன்னும் உறுதி செய்கின்றன. மேனனும்,பிரனாப்பும் இலங்கை ராணுவத்தின் வெற்றியை பகிர்ந்து கொள்ளத்தான் இலங்கை சென்றனர் என்ற சிங்களவர்களின் பேச்சை கருணாநிதி கூட மறுக்க முடியாது. இதில் இந்த இருவரும் கருணாநிதியிடம் ஆலோசனை செய்த பின்னர் தான் இலங்கை சென்றனர் என்பது ஒரு கேளிக்கூத்தின் உச்சகட்டம்.
திமுகவின் உள்ள பலருக்கு கலைஞர் இலங்கை பிரச்சனையில் சிறப்பாக செயல்படவில்லை என்ற உணர்வு உள்ளது. வரும் தேர்தலில் அது கட்டாயம் அது பிரதிபலிக்கும். பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் வாக்குகளை மனதில் வைத்து மத்திய அரசு இலங்கை தமிழர் பிரச்சனையில் சில நாடகங்களை போடலாம். ஆனால் அது எந்த அளவு மக்களிடம் எடுபடும் என்பது டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் கைகளில் தான் உள்ளது.
Friday, January 16, 2009
| [+/-] |
இந்திய வெளியுறவு செயலாளர் எதற்காக கொழும்பு சென்றுள்ளார்? |

பாவப்பட்ட இலங்கைத்தமிழர்களும் மரத்துப்போய் நிற்கும் இந்திய அரசும்
இன்றைக்கு தினமலர் தலைப்பு செய்தியை படித்த உடன் அந்த பத்திரிகையின் தமிழ் எதிர்ப்பு கோமாளித்தனம் வெளிப்பட்டு நிற்பதுடன் அதனுடன் சேர்த்து இந்திய அரசாங்கம் தமிழர்களை எப்படி முட்டாள்களாக நினைப்பதையும் நிர்வாணமாக காட்டியுள்ளது.
இலங்கை பிரச்சனையில் தொல் திருமாவளவன் இருக்கும் உண்ணாவிரதத்தை நாடகம் போல் சித்தரிக்கும் தினமலர் செய்தி இந்திய வெளியுறவுத்துறை செயலரின் இலங்கை பயணத்தை சிரத்தை மிகுந்த ஒரு பயணம் காட்ட முயன்றாலும் அதில் அடுத்த பத்தியியேலே சாயம் வெளுத்து போய் நிற்கிறது.
இலங்கைக்கு இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் போர் நிறுத்தத்திற்கு செல்லவில்லை. அவர் பயணம் முடிந்த அளவு இலங்கையை திருப்திப்படுத்தவே நடக்கிறது என்பதை சொல்லும் தினமலர் இதை நாடகம் என்று சொல்லாமல் திருமாவளவன் உண்ணாவிரதத்தை நாடகம் என்று சொல்லுகிறது என்றால் இப்படிப்பட்ட பத்திரிகைகள் தரம் எப்படி இருக்கிறது.
இலங்கை தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலை குறித்து உலகத்ததமிழர்கள் அனைவரும் தூக்கத்தை தொலைத்துக்கொண்டிருக்கும் போது கருணாவின் காட்டிக்கொடுக்கும் பேட்டியை போட்டால் கூட பத்திரிகை சுதந்திரம் என்று சொல்லி சகித்துக்கொள்ளலாம். நாடக பாத்திரங்களை மாற்றி போடுகிறது என்றால் இப்படிப்பட்ட பத்திரிகைகளை தமிழகத்தின் முன்னணி பத்திரிகை என்று சொல்லுவது தமிழர்களுக்கு தான் கேவலம்.
இலங்கை பிரச்சனையில் இந்தியால் என்ன செய்யமுடியும்? ஒன்றும் முடியாது என்பதை விட புலிகள் முற்றிலும் அழிக்கப்படும் வரை இந்தியா ஒன்றுமே செய்யாது என்பது தெரிந்தது. தமிழர்களை கூண்டோடு அழிக்க வெறிகொண்டு அழையும் , தமிழக தலைவர்களை அரசியல் கோமாளிகள் என்று சொன்ன இலங்கை தளபதி சரத்தை சிறந்த இராணுவ தலைவர் என்று பாராட்டிய இந்திய வெளியுறவு செயலாளர் எதற்காக கொழும்பு சென்றுள்ளார். சரத்தை நேரில் பாரட்டவா?
இந்த விவகாரத்தில் இலங்கை தமிழர்களை விட பாவப்பட்டவர்களாக தெரிவது பலமின்றி புதுடெல்லியை பார்த்து நிற்கும் தமிழக அரசியல் தலைவர்கள் தான்.
Thursday, December 11, 2008
| [+/-] |
இலங்கையில் ஈழர் பலி |

இலங்கையில் ஈழர் பலி
மும்பை இலக்கிய உலகின் ஒரு விடிவெள்ளி. பல்வேறு கவிதை தோட்டங்களுக்கு சொந்தக்காரர், அன்பர், நண்பர் திரு. முகவைத்திருநாதன் அவர்களின் ஈழத்தமிழர் பற்றிய கவிதை கண்ணீர் ஒன்று இதோ:
உருளும் உலகின் ஒவ்வோர் அங்குலமும்
உருவாகி இருக்கும் ஒவ்வோர் உயிர்க்கும்
புழுவென அவைவாழ புகழிடம் ஆகுமே ( அவையாவும்)
உலகின்மேல் தாம் கொண்ட உரிமைகள் பாடுமே
உன்னைப்போல் பிறரையும் எண்ணிப்பார் தெரியும் ( அதுயிம்)
மண்ணுளோர் மனமிருப்பின் மற்றவை மறையும்
தனக்கொன்று பிறர்க்கொன்று புறம்பேசித்திரியின்
கணக்குள் அடங்கா பிணக்குகள் பிறக்குமன்றோ
பரமுள நீதிதனை பலமுளான் மீறலாமோ
அறமற்றவன் பீடமேறின் அநீதியே நீதியாமோ!
அரக்கனென அவனைச்சொல்ல அகிலம் தயங்கலேனோ
சிரமற்றார் போலுலகு இருநாக் கேற்பதேனோ!
உடமை உரிமை தன்மானம் பறிபோகும்போது
கடமை எதுவெனில் உரிமைக்காய் உயிர்த்தலே
உடலுயிர் அனைத்தும் உரிமைக்காய் நீக்குவர்
விடலுயிர் உரிமைக்காய்மேலான தென்றே
கண்முன் அநீதிகண்டும் கண்பட்டி கட்டலாமோ ( கண்டும்)
பின்திரும்பும் பழக்கம் பெடையர்க்கன்றோ சொந்தம்!
கயமையின் காட்டுத்தீயில் ஈழர்பலி போகலாமோ!
நயவஞ்சக நியத்தாலே நீதிசாம்பல் ஆகலாமோ!
கண்முன் அநீதிகண்டும் கண்பட்டி கட்டலாமோ
Monday, October 20, 2008
| [+/-] |
மீண்டும் ராஜ் தாக்கரே… |

என்னை கைது செய்து பாருங்களேன் என்று மகாராஸ்ட்டிரா நவ்நிர்மன் சேனா தலைவர் ராஜ் தாக்கரே விடுத்த மிரட்டலுக்கு ( உண்மையைச்சொன்னால் வேண்டுகோளுக்கு) இணங்க மகாராஸ்ட்ரா அரசாங்கம் தங்களிடம் போலீஸ் துறை என்று ஒன்று உண்டு என்பதை நிருபித்துள்ளது. கடைசியாக எல்லா கட்சிகளும் செய்த ஆர்ப்பாட்டம் தாங்காமல் இனி வழியே இல்லை என்று மாநில அரசாங்கம் ரத்தினகிரியில் வைத்து இன்று அதிகாலை ராஜ் தாக்கரேயை கைது செய்துள்ளது.
அரசியல் கட்சித்தலைவர்களை அதுவும் அடாவடி அரசியல் நடத்துபவர்களை கைது செய்வது கொஞ்சம் கஷ்டம் தான். பால்தாக்கரே போன்றவர்களை கைது செய்தால் அடுத்தவர்களை அந்த கட்சியினர் அடிப்பார்கள். தமிழகத்தில் சில கட்சித்தலைவர்கள் கைது செய்யப்பட்டால் அந்த கட்சியினர் தங்களைத்தானே மண்ணென்ணை கேன் வைத்து அழித்துக்கொள்ளுவார்கள். தற்கொலை கலாச்சாரத்தை உலகிற்கு அறிமுகம் செய்த பாரம்பரியத்தின் இரத்தங்கள் என்பதின் வெளிப்பாடோ என்னவோ?
பொதுவாக இப்படி தலைவர்கள் கைது செய்யப்படும்போது ஏற்படும் கொந்தளிப்பை வைத்துத்தான் அவர்களின் பலம் எப்படி இருக்கிறது என்பதை கணிக்கப்படுகிறது. ஜெயலலிதா ஆட்சியில் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்ட அன்று சென்னையில் பெரிய அளவில் வன்முறை எதுவும் இருக்கவில்லை. அதை வைத்து திமுகவிற்கு சென்னையில் கூட ஆதரவு இல்லையோ என்று சந்தேகித்து எழுதிய பத்திரிகைளும் இருக்கின்றன. ஆனால் இந்த கைது தான் திமுக மீண்டும் ஆட்சி பிடிக்க உதவிய முதல் படி என்பது ஒருபுறம் இருக்கட்டும். அந்த கைதை சன்டிவி கதற கதற காட்டி கிட்டத்தட்ட ஒருவகையான மனநோயையே சிலருக்கு உண்டாக்கியதையும் இங்கு மறக்க முடியாதது தான்.
இப்போது ராஜ் தாக்கரே கைது செய்யப்பட்டுள்ளார். தான் கைது செய்யப்பட்டால் மகாராஸ்டிரா பத்தி எரியும் என்று அவர் மிரட்டினார். ஆனால் இதுவரை எதுவும் பத்தி எரியவில்லை, சிவசேனாவினரின் வயிற்றெரிச்லைத்தவிர.
ராஜ் தாக்கரே சொல்லுவதில் நியாயம் இருக்கிறதா என்று பார்த்தால் ஆம் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் அதற்கு அவர் கையாளும் வன்முறை தான் முகத்தை சுழிக்க வைக்கிறது. இந்தி பேசாத வடஇந்திய மாநிலங்கள் தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரில் தொடர்ந்து விட்டுக்கொடுத்தமையால் வந்த கேடுகள் இது.
மகாராஸ்டிராவில் மராத்தி பேசுகிறார்கள். குஜராத்தில் குஜராத்தி பேசுகிறார்கள். ஆனால் இந்த இரண்டு மாநிலங்களிலும் பிராந்திய மொழி திரைப்படங்கள் மருந்துக்கு தான் உள்ளது. திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் பல்வேறு துறைகளில் மராத்தி மற்றும் குஜராத்தி கலாச்சாரங்ளை இந்தி அழித்துள்ளது. இன்றைக்கு மும்பையை எடுத்துக்கொண்டால் இங்கு வாழ இந்தி கட்டாயம் தேவை. ஆனால் மராத்தி தேவையில்லை. இப்படி சென்னையில் ஒருநிலை வந்தால் நமக்கு எப்படி இருக்கும்?
ராஜ்தாக்கரேயின் இந்த அரசியலால் பிராந்திய கலாச்சாரங்கள் வலுப்பெறுபவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது மகிழ்சிக்குரிய ஒரு விசயம் . ஆனால் ராஜ்தாக்கரே மராத்திய கலச்சாரம் பற்றி கவலைப்படும்போது அதில் ஆதிகால மனிதனின் வன்முறையை ஆயுதமாக்குவது தான் கவலை தருகிறது.
ரயில்வேக்கள் இந்தியை பரப்பும் கருவிகளாக பயன்படுத்தப்படுகின்றன. ரயில்வேக்களில் வட இந்தியர்கள் தான் அதிக அளவில் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். பல வேலைவாய்ப்பு அறிவிப்புகள் இந்தியில் மட்டும் வெளியிடப்படுகின்றன. சமீபகாலமாக பீகாரைச்சேர்ந்தவர்கள் பெருமளவில் வேலைக்கு சேர்க்கப்படுகின்றனர். இதற்கு பல புள்ளியியல் ஆதாரங்கள் உள்ளன. இவைகள் கண்டிக்கப்பட வேண்டியவையே.
தேசிய ஒருமைப்பாட்டின் பெயரில் பிராந்திய நலன்களை காவு கொடுக்கக்கூடாது. சென்னைக்கு வரும் ஒரு வெளிமாநிலத்தவர் விரைவில் தமிழ் கற்றுக்கொண்டு தமிழில் பேசுகிறார். மும்பைக்கு வரும் ஒரு வெளிமாநிலத்துக்காரர் மராத்திக்கு பதிலாக இந்தி கற்றுக்கொள்ளுகிறார். இது மராத்திய கலாச்சாரத்தை அழித்து விடும் படிக்கல்.
குஜராத்தியர்கள் தங்கள் மொழியை காவு கொடுத்து இந்தியை ஏற்றுக்கொண்டதால் அவர்களுக்கு வியாபார பலன்கள் கிடைத்தது , ஆனால் மராத்தியர்களுக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை.
எனவே ராஜ் தாக்கரேயின் உணர்வுகளை வரவேற்கிறோம். ஆனால் அதற்கு கையாளும் வழிமுறைகளை கண்டிக்கிறோம். இதற்கு பதிலாக ராஜ் தாக்கரேயின் அலுவலகங்களில் அடுத்தவர்களுக்கு இலவசமாக மராத்தி சொல்லிக்கொடுத்தால் அது அவரின் கொள்கைகளுக்கு இன்னும் வலு கொடுக்கும்.
Monday, October 6, 2008
| [+/-] |
கருணாநிதி என்ன செய்வார்? |

இலங்கை தமிழர் பிரச்சனையில் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி என்ன செய்யபோகிறார் என்பதை விட அவர் என்ன சொன்னாலும் அதை எதிர்மறையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று என்று பெரிய கூட்டம் காத்திருக்கிறது.
இன்று காலையில் ஏழு மணிக்கு என்டிடிவி ஆங்கில செய்தி கருணாநிதி இலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசியலிருந்து விலகுவதவாக மிரட்டல் என்று செய்தி வெளியிட்டது. அவர் அப்படி சொன்னது உண்மை தான். ஆனால் கலைஞர் டிவியில் ஏழரை செய்தியில் அந்த மிரட்டல் பற்றி ஒன்றுமே குறிப்பிடப்படவில்லை.
இலங்கை தமிழர் பிரச்சனையில் கருணாநிதியால் அல்லது மத்திய அரசால் கூட இப்போது பெரிதாக ஒன்றும் செய்து விடமுடியாது என்ற கனமான உண்மை ஒருபுறம் இருந்தாலும் கிளிநொச்சியை இலங்கை ராணுவம் நெருங்கும் போது அது இந்தியாவில் ஒரு சலசலப்பையும், தமிழகத்தில் மற்றுமொரு கேளிக்கூத்தையும் உருவாக்கும் என்பது எதிர்பார்த்தது தான்.
இலங்கை தமிழர்களுக்கும் தமிழக தமிழர்களுக்கும் உள்ள உறவு தொப்புள் கொடி உறவு என்பதை யாரும் மறுக்க முடியாதது தான். பக்கத்து ஊர் மாதிரி அருகில் இருக்கும் இலங்கையில் நம்மவர்கள் கூண்டோடு அழிக்கப்படுவதை காணும் போது உண்மை தமிழர்களுக்கு நெஞ்சம் பிழியப்படுவது உண்மை தான்.
ஆனால் தற்போதைய சர்வதேச அரசியல் சூழ்நிலைகளில் இந்த பிரச்சனையில் இந்திய அரசால் கூட ஒன்றுமே செய்யமுடியாது. தமிழர்களை கொல்லாதே என்று ஒரு கண்துடைப்பு நாடகத்தை மட்டுமே நடத்திட முடியும்.
இலங்கை தமிழர்கள் விசயத்தில் அதிகபட்சம் நாம் செய்யக்கூடியது, தமிழகத்தில் உள்ள அனைவரும் ஒட்டுமொத்தமாக இந்த இனப்படுகொலையில் இடிந்து போய் இருக்கிறோம் என்று காட்டுவது மட்டும் தான். மற்றபடி இந்த பிரச்சனையை வைத்து தமிழகஅரசியல் கட்சிகள் அனைத்துமே செய்யக்கூடிய கேலிக்கூத்துக்கள் இந்த நம் வலியை இன்னும் கூட்டத்தான் முடியும்.
ஆனால் இதில் ஒன்றை நாம் யாரும் மறுக்க முடியாது. கலைஞரும் இதை அரசியல் லாப ரீதியாக தான் பார்ப்பார் என்ற குற்றச்சாட்டு ஒரு புறம் இருந்தாலும் அவரை போன்று இன்றைய சூழ்நிலையில் வேறு யாரும் இதைக்கூட செய்ய முடியாது என்பது தான் உண்மை.


